கோபி அன்னானுக்கு அஞ்சலி செலுத்தும் சுவிட்சர்லாந்து: தனிச் சிறப்புக் காரணம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவரான கோபி அன்னானுக்கு சுவிட்சர்லாந்து சிறப்பு அஞ்சலி செலுத்துகிறது, காரணம் அவருக்கும் சுவிட்சர்லாந்துக்கும் தனிப்பட்ட ஒரு உறவு இருந்தது.

சுவிட்சர்லாந்தை தனது சொந்த ஊரான கானாவுக்கு அடுத்து இரண்டாவது தாய்நாடு என்று அவர் கூறுவதுண்டு.

2006ஆம் ஆண்டு தனது ஐக்கிய நாடுகள் சபை தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகும் ஜெனீவாவிலேயே வாழ அவர் முடிவு செய்தார்.

அவர் ஜெனீவாவிலேயே கோபி அன்னான் தொண்டு நிறுவனத்தையும் நிறுவினார்.

Bernஇல் மரணமடைந்த கோபி அன்னானுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஐ.நா உறுப்பு நாடுகள் அனைத்தின் கொடிகளும் அகற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொடி மட்டும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபரான ஒபாமா, நோபல் பரிசு வென்றவரான கோபி அன்னான் ஒரு சிறந்த உலகுக்காக எப்போதுமே போராடியவர் என்று புகழ்ந்துரைத்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினும் கோபி அன்னான் ஒரு குறிப்பிடத்தக்க நபர் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers