சுவிட்ஸர்லாந்தின் தலைநகரத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்

Report Print Givitharan Givitharan in சுவிற்சர்லாந்து

சுவிட்ஸர்லாந்தின் தலைநகரமான பேர்ண் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு பொதுமக்கள் கூடும் பூங்காவாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

Parklets எனும் திட்டத்தின் கீழ் மேலும் சில பகுதிகள் இவ்வாறு மாற்றியமைக்கப்படவுள்ளன.

இதனை பரீட்சிக்கும் முகமாகவே முதன் முதறையாக பேர்ண் நகரம் இவ்வாறு 2 மாத காலத்திற்கு மாற்றியமைக்கப்படவுள்ளது.

இங்கு பொதுமக்கள் கூட முடிவதுடன் அவர்களுக்கு வசதியாக மேசைகள், வாங்குகள் மற்றும் சூரிய ஒளியை தடுக்கும் நிழற்குடைகளும் அமைக்கப்படவுள்ளன.

இப் பகுதியில் பணம் ஈட்டும் வியாபார நடவடிக்கைள் தடைசெய்யப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் மனம் விட்டு பேசிப்பழகுவதன் ஊடாக இனவாத செயற்பாடுகளில் இருந்து விடுபட முடியும் என கருதியே இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத் திட்டமானது முதன் முறையாக 2010ம் ஆண்டு அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்