ஜெனிவாவில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களின் அடையாளம் தெரிந்தது

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவாவில் கடந்த வாரம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் மூவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள இரவு விடுதி ஒன்றின் வெளியே அதிகாலையில் ஒரு கூட்டம் ஆண்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஐந்து பெண்கள் காயமடைந்தனர்.

இதில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்ததோடு ஒரு பெண் கோமாவுக்கு சென்றார், அவர் இன்னும் கோமாவிலேயே உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு இன்னும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை பொலிசார் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிடிபட்ட மூவரும் DNA ஆதாரங்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் கண்ணால் கண்டவர்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் தனது குடிமக்களை இன்னொரு நாட்டிடம் கையளிக்காது என்பதால் பிடிபட்டுள்ள குற்றவாளிகள் பிரான்சிலுள்ள Annecy அதிகாரிகளால் விசாரிக்கப்பட உள்ளார்கள்.

இந்த சம்பவம் சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நான்கு சுவிஸ் நகரங்களில் 500க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேரணிகளில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்