சுவிட்சர்லாந்தில் சுட்டெரிக்கும் வெயில்: சூரிச் பொலிசார் முன்வைத்த நெகிழ்ச்சி கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத வெயில் சுட்டெரிப்பதால் வளர்ப்பு நாய்களை அக்கறையுடன் கவனிக்க வேண்டும் என சூரிச் பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கடுமையான வெயில் வாட்டிவருகிறது. பல மாகாணங்களில் வறட்சி தலைதூக்கியுள்ளது.

பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் வளர்ப்பு பிராணிகள் தொடர்பிலும் பொதுமக்கள் அக்கறை செலுத்த வேண்டும் என சூரிச் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக வளர்ப்பு நாய்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தவும், வெயில் காலத்தில் அவைகளின் கால்கள் புண்ணாகலாம் என்பதால் நாய்களுக்கான காலணிகளை பயன்படுத்துதல் நலம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் கோடை வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவது போன்றே சமீப நாட்களாக சுவிட்சர்லாந்தும் சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவித்து வருகிறது.

இந்த நிலையிலேயே சூரிச் பொலிசார் வளர்ப்பு பிராணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தக் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பகல் வேளைகளில் வாகனத்தில் கொண்டு செல்லப்படும் பிராணிகளுக்கு போதுமான நீராகாரம் வழங்குவது சிறப்பு என தெரிவித்துள்ள பொலிசார்,

பணி நிமித்தம் செல்லும் பொதுமக்கள் தங்கள் காருக்குள் வளர்ப்பு பிராணிகளை விட்டுச் செல்வது கண்டிப்பாக தவுர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்