சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில்: தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிப்பதால் தேசிய தினக் கொண்டாட்டாங்களின் முக்கிய பகுதியான வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் வெப்பநிலை இந்த வாரம் முழுவதுமே தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனீவா ஏரிப்பகுதி மற்றும் வலாயிஸ் பகுதிகளில் வெப்பநிலை 35 டிகிரியை எட்டும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமே 30 டிகிரிக்கு அதிகமான வெப்பமே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை அதிகமாக இருப்பதால் தீப்பிடிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.

உள்ளூரிலும் தனியார் வாண வேடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகளில் கால்நடைகள் மேயும் இடங்களில் தண்ணீர் கொண்டு ஊற்றுவதற்காக ராணுவ ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே காட்டுத்தீ பற்றி எரியும் Ticino பகுதியில் அதை அணைக்க உதவுவதற்காகவும் ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்