தொலைந்த பணப்பை: பத்தாண்டுகளுக்கு பின்னர் மீட்டவருக்கு வியப்பு!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
627Shares
627Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் பணப்பையை தொலைத்த நபர் ஒருவர் நீண்ட பத்தாண்டுகளுக்கு பின்னர் அதேபடி குறித்த பணப்பையை மீட்டெடுத்துள்ள சம்பவம் வியப்பை அளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Solothurn மாகாணத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த Pjeter Marku என்பவர் தமது பணப்பையை தொலைத்துள்ளார்.

அதில் அவரது நிறுவன அடையாள அட்டை, வங்கி பண அட்டை மற்றும் 500 பிராங்க் பணமும் இருந்தன. மட்டுமின்றி சுமார் 20 ஆண்டுகளாக பாதுகாத்துவந்த நீல வண்ண 20 பிராங்க் தாளும் அதில் இருந்தன.

தொலைந்த பணப்பையை பல மணி நேரம் தொடர்ந்து தேடியும் அவரது பார்வைக்கு சிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த கட்டிடத்தில் தற்போது செயல்படும் அலுவலகத்தில் இருந்து குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் தொலைந்துபோன பணப்பை கண்டெடுத்துள்ளதாகவும், வந்து பெற்றுக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த அலுவலகம் சென்று தனது தொலைந்த பணப்பையை மீட்ட அவருக்கு வியப்பு காத்திருந்தது. அதில் 500 பிராங்க் பணமும், இனி ஒருபோதும் தமது கைக்கு எட்டாது என நிணைத்திருந்த அந்த 20 பிராங்க் தாளும் அதேபடி அந்த பணப்பையில் இருந்தது அவரை நெகிழ வைத்துள்ளது.

கொசோவோ நாட்டில் இருந்து 1989 ஆம் ஆண்டு சுவிஸ்ஸில் பிழைப்பு தேடி வந்த Pjeter Marku-கு கிடைத்த முதல் ஊதியம் அந்த நீல வண்ண 20 பிராங்க் தாள் என கூறப்படுகிறது.

சுமார் 20 ஆண்டுகளாக அவர் அதை தமது சுவிஸ் வாழ்க்கையின் அடையாளமாக பாதுகாத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்