சுவிஸ் மலைகளில் இந்தாண்டு மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளார்கள்: அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
158Shares
158Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் உள்ள மலைகளில் இந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை சுவிஸ் ஆல்பைன் கிளப் வெளியிட்டுள்ளது. ஆனாலும் கடந்தாண்டை ஒப்பிட்டால் 24 இறப்புகள் குறைவாகவே உள்ளது.

மலை மீது ஏறி சென்றவர்களில் 2,244 பேர் இந்தாண்டு ஜனவரியிலிருந்து செப்டம்பர் வரை அவசர உதவி கோரியுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொலைதூர மலைகளின் மீது ஏறும் போது 2017-ன் முதல் ஒன்பது மாதங்களில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது 2016-ல் 33 ஆக இருந்தது. ஸ்கை டைவிங், மலைகள் மீது பைக் ஓட்டுவது போன்ற விளையாட்டுகளால் அதிகம் பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் கிரஹுபுண்டன் மண்டலத்தில் உள்ள மலைகளில் மட்டும் இந்தாண்டு ஒரே சமயத்தில் எட்டு பேர் காணாமல் போனார்கள்.

இறந்தவர்கள் எண்ணிக்கையில் இவர்கள் ஏழு மாதங்கள் வரை சேர்க்கப்படாத நிலையில் பின்னர் கிடைக்காமலே போனதால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்