உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: சுவிஸ் வங்கி தகவல்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
187Shares
187Shares
lankasrimarket.com

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 2015-லிருந்து பத்து சதவீதம் அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பிரபலமான ubs வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரையில்லாத அளவில் கடந்த வருடம் முதல் முறையாக அமெரிக்க கோடீஸ்வரர்களின் (563) எண்ணிக்கையை ஆசியா கோடீஸ்வரர்களின் (637) எண்ணிக்கை முந்தியுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் ஐரோப்பியா 342 கோடீவரர்களுடன் உள்ளது.

அதே போல உலகின் மிக பெரிய கோடீஸ்வரர்களின் கட்டுபாட்டில் இருக்கும் சொத்து மதிப்பு 5.1 டிரில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க மொத்தமுள்ள மிக பெரிய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கடந்த 2015-லிருந்து தற்போது 1500-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது எனவும், சதவீத அடிப்படையில் இது பத்து சதவீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உள்ள கோடீஸ்வரர்களில் 1542 பேர் முழு நேர நிறுவனம் அல்லது பகுதி நேர நிறுவனம் நடத்தி வருவதும், அவர்களிடம் மொத்தமாக 27.7 மில்லியன் ஊழியர்கள் வேலை செய்வதும் தெரியவந்துள்ளது.

கடந்த 2016-ல் புதிதாக கோடீஸ்வரர்களாக ஆனவர்களில் நான்கில் மூன்று பங்கு பேர் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் ubs வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்