சுவிஸில் அதிரடி மாற்றம்: புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பொதுமக்கள்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் சந்தேகத்திற்குரிய நபர்களின் உரையாடல்களை கண்காணிக்கும் கூடுதல் அதிகாரங்களை அந்நாட்டு புலனாய்வு துறைக்கு வழங்க பொதுமக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

சுவிஸில் தனிமனித உரிமை மற்றும் அந்தரங்கத்தை பாதுகாப்பது அந்நாட்டு அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

எனினும், தீவிரவாதிகள் மற்றும் கிரிமினல் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் நபர்களின் அந்தரங்கத்தையும் புலனாய்வு துறை அதிகாரிகள் கண்காணிக்க முடியாத நிலை இருந்து வந்துள்ளது.

இந்த தடைக்கல்லை அகற்றி சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கவும், அவர்களது கைப்பேசி உரையாடல் மற்றும் ஈமெயில் விவகாரங்களை இடைமறித்து அறிந்துக்கொள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், இந்த கோரிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் நேற்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பின் முடிவில் சுமார் 65.5 சதவிகித மக்கள் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதன் மூலம், இனிவரும் காலங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களின் அனைத்து விதமான தகவல்கள் பரிமாற்றங்களை சுவிஸ் புலனாய்வு துறை அதிகாரிகள் இடைமறித்து கண்காணித்து வருவார்கள்.

அவசியம் ஏற்பட்டால், சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை அறிய அவர்களுக்கு தெரியாமல் ரகசிஅ கமெராக்களும் பொருத்த அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுவிஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் தடுக்கப்படும் என இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், புலனாய்வு அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளித்துள்ளதன் மூலம் தனி நபரின் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக உள்ளது என இந்த புதிய சட்டத்திற்கு சிலர் கண்டனமும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments