விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு ஓர் அதிரடி எச்சரிக்கை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த விமானங்களில் பயணிக்கும் நபர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை கொண்டு சென்றால் கடுமையான தண்டனை விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் நாட்டு பாராளுமன்றத்தில் தற்போது புதிய மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் அடிப்படையில், விமானத்திற்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை கொண்டு வரும் நபர்களை கைது செய்வதுடன் அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 பிராங்க் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மசோதாவை கேபினட் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், பாராளுமன்ற விவாதத்திற்கு பிறகு சட்டமாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ் முறையாக உரிமம் பெற்ற நபர் துப்பாக்கியை விமானத்தில் கொண்டு சென்றால், அவர் கைது செய்யப்பட்டு பின்னர் தண்டனை இல்லாமல் விடுதலை செய்யப்படுவார்.

ஆனால், தற்போது விவாதத்தில் உள்ள சட்டத்தின் கீழ் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களை கொண்டு செல்லும் பயணிகள் கைது செய்யப்படுவதுடன் தண்டனைக்கும் ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments