சுவிஸில் திருட்டு குற்றம் அதிகமாக நிகழும் மாகாணம் எது தெரியுமா?

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா மாகாணத்தில் தான் கார் திருடும் குற்றம் அதிகளவில் நிகழ்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிஸ் நாட்டை சேர்ந்த AXA Winterthur என்ற காப்பீடு நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் நிகழ்ந்த கார் திருட்டுக்களை பற்றி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வில் சுவிஸ் மாகாணங்களில் ஒன்றான ஜெனிவாவில் அதிகளவில் கார் திருட்டு குற்றங்கள் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் நிகழும் சரசாரி கார் திருட்டு குற்றத்தை விட ஜெனிவா மாகாணத்தில் 6 மடங்கு அதிகமாக நிகழ்கிறது.

இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் பேசல் மாகாணமும், மூன்றாவது இடத்தில் வாட் மாகாணமும் உள்ளன.

அதே போல், சுவிஸ் நாட்டிலேயே குறைந்தளவு கார் திருட்டு குற்றம் நிகழும் Glarus மாகாணம் இடம் பெற்றுள்ளது.

சுவிஸில் கார் திருட்டு அடிக்கடி நிகழாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 கார் திருட்டு புகார்கள் பதியப்பட்டுள்ளன.

கார்களை திருடும் கும்பல் அவற்றை உடனடியாக வெளிநாடுகளுக்கு கடத்தி விடுவதால், சில கார்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும், சுவிஸ் நாடு முழுவதும் Volkswagen கார்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், இவ்வகை கார்கள் மட்டும் அதிகளவில் திருட்டு போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments