இளம்பெண்ணிற்கு இப்படியும் ஒரு கொடுமை ஏற்படுமா? தீர்ப்பு வழங்கிய நீதிபதி உருக்கம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கற்பழித்து அவரிடம் திருடியுள்ள குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுமையான தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸின் பேர்ன் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தான் இந்த மோசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் திகதி அதிகாலை நேரத்தில் பெயர் வெளியிடப்படாத அப்பெண் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் நீச்சல் குளம் நோக்கி சென்றுள்ளார்.

காட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள அந்த சாலையில் 34 வயதான நபர் ஒருவர் வழிப்பறி செய்வதற்காக ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக பெண் வருவதை பார்த்த அந்த நபர் அவர் மீது பாய்ந்து அவரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

உடனே தன்னிடம் இருந்த கத்தியை காட்டி பணம் கொடுக்க மிரட்டியுள்ளார். உயிருக்கு பயந்த அப்பெண் அவரிடம் இருந்த விலைமதிப்பற்ற பொருட்களை அந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆனால், பெண்ணிடம் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்ப எண்ணியபோது அப்பகுதியில் யாரும் இல்லாததை உணர்ந்த அந்நபர் பெண்ணை திடீரென தாக்கியுள்ளார்.

பின்னர், பெண்ணின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று கொடூரமாக கற்பழித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், பெண்ணின் உடல் முழுவதும் காயங்களை ஏற்படுத்திய பின்னர், பெண் மயங்கியதும் அங்கிருந்து தப்பியுள்ளார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு சுயநினைவு திரும்பிய அப்பெண் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

நபரிடம் விசாரணை செய்தபோது அவர் ஆப்பிரிக்காவில் உள்ள லிபிரியா நாட்டை சேர்ந்தவர் என்றும் பேர்ன் நகரில் 12 வயது முதல் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று பேர்ன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, பெண்ணை கொடூரமாக கற்பழித்தது ஒரு மோசமான செயல் என்பதை நான் உணர்கிறேன். அதற்காக பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குற்றவாளி பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி, என்னுடைய நீதிமன்ற வரலாற்றில் ஒரு பெண்ணிற்கு இந்தளவு கொடூரம் ஏற்பட்டுள்ளதை தற்போது தான் கண்டுள்ளேன்.

எனவே, குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாகவும், கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்கு குற்றவாளி 25,000 பிராங்க்(37,32,641 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments