சுவிஸில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் ‘பன்றி பொம்மை’: பொலிசார் மீது குவியும் புகார்கள்

Report Print Tony Tony in சுவிற்சர்லாந்து
சுவிஸில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் ‘பன்றி பொம்மை’: பொலிசார் மீது குவியும் புகார்கள்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் வகையில் ‘பன்றி பொம்மை’ வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஜெனிவா நகரில் உள்ள காவல் நிலையத்தில் தான் இந்த பன்றி பொம்மை வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இதே நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் புகார் கொடுப்பதற்காக அண்மையில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வரவேற்பு அறையில் ‘மிகவும் சுத்தம் செய்யப்பட்ட பன்றி’ என்ற அரேபிய வாசகங்களுடன் பன்றி பொம்மை வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பன்றி இறைச்சியை உண்ணுவது இஸ்லாமிய மதக்கொள்கைகளுக்கு எதிரானது ஆகும். ஆனால், இவ்வாறு பன்றி பொம்மையை காட்சி பொருளாக வைத்திருப்பதன் மூலம் இஸ்லாமியர்களை பொலிசார் இழிவுப்படுத்தியதாக அந்த பெண்மணி உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

காவல் நிலையம் என்பது நீதித்துறையை அடையாளப்படுத்தும் ஒரு பொது இடமாகும். இந்த இடத்தில் இதுபோன்ற ஒரு சர்ச்சைக்குரிய பொம்மையை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது என புகார் செய்யப்பட்டது.

புகாரை தொடர்ந்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய பொலிசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, ‘ஒரு வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தபோது, அதனை கண்டுபிடித்து கொடுத்ததற்காக அந்த வீட்டு உரிமையாளர் இந்த பன்றி பொம்மையை பரிசாக கொடுத்ததார்.

இதனை ஒரு காட்சி பொருளாக தான் வைத்துள்ளோம். இஸ்லாமியர்களை அவமதிக்கும் நோக்கம் எதுவும் இல்லை’ என பொலிசார் பதிலளித்துள்ளனர்.

ஆனால், பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும் இதுபோன்ற பொம்மையை காவல் நிலையத்தில் வைக்க கூடாது என உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அந்த பொம்மை உடனடியாக காவல் நிலையத்திலிருந்து நீக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments