பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்! எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்...

Report Print Sujitha Sri in அறிக்கை

வட இந்திய கடலில் உருவாகவுள்ள சூறாவளிக்கு பெயர் சூட்டுவதற்காக பொது மக்களிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. அத்துடன் குறித்த பெயர் தொடர்பில் சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

பொருத்தமான மற்றும் இலகுவான வகையில் பெயர் அமைய வேண்டும் என்பதுடன், ஆங்கில மொழியில் குறித்த பெயர் ஆகக் கூடியது 8 எழுத்துக்களை கொண்டிருக்கும் விதத்தில் அமைய வேண்டும்.

மேலும், இந்த பெயரினை இந்த மாதம் 15ஆம் திகதிக்கு முன் தமது திணைக்களத்தில் சமர்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்