கனடாவில் பிரமாண்ட நிகழ்வு! ஒரே மேடையில் 1000 தமிழ் கலைஞர்கள்!

Report Print Dias Dias in அறிக்கை

கனடா டொரன்டோ நகரில் உள்ள Scotiabank arena 'IBC தமிழா - டொரன்டோ 2019' எனும் மகுடத்தில் மிகப் பிரமாண்டமான மேடை நிகழ்வொன்று 29.06.2019 அன்று நடைபெற உள்ளதாக IBC-தமிழ் ஊடகக் குழுமம் அறிவித்துள்ளது.

IBC-தமிழ் ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.

உலகத் தமிழருக்கோர் உறவுப் பாலமான IBC தமிழ் ஊடகக் குழுமம் உலகை நோக்கிய தனது நெஞ்சை நிமிர்த்திய பயணத்தின் ஒரு அங்கமாக இந்த பிரமாண்டமான மேடை நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்துள்ளது.

இதுகாலவரையில் ஒரு மேடையில் நிகழாத அற்புதமாக 1000 தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி முத்தமிழையும், தமிழின் பெருமையையும், தமிழரின் கலைகளையும் அடுத்ததலை முறையினரை நோக்கி நகர்த்தும் ஒரு முயற்சியாக 'IBC தமிழா -டொரன்டோ 2019' வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

கனடா ஐரோப்பா, இலங்கை, இந்தியா, மத்தியகிழக்கு, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா என்று உலகம் முழுவதும் பரவி வாழ்கின்ற தமிழ் கலைஞர்கள் தமது உச்சபட்ச திறமைகளை ஒரு பிரமாண்ட மேடையில் வெளிப்படுத்துகின்றது.

இதேவேளை, அகதிகளாக வந்து இன்று புலம்பெயர் மண்ணில் அதிதிகளாக மாறிவிட்டுள்ள பல கலைஞர்களும் இந்தநிகழ்வில் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்.

மேலும், பிரம்மாண்டங்களுக்காகவும் அங்கீகாரங்களுக்காகவும் ஏங்குகின்ற எம் தமிழ் உறவுகளின் ஆத்மதாகத்தை இந்த 'IBC தமிழா -டொரன்டோ 2019' நிச்சயம் தீர்த்துவைக்கும் என்று உறுதியாகIBC-தமிழ் ஊடகக் குழுமம் நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers