மட்டகளப்பு பாடசாலையில் பதற்றம்! மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர்! பின் நடந்தது என்ன்?

Report Print Bharathy in இலங்கை

களுவாஞ்சிக்குடியிலுள்ள பிரபல பாடசாலையின் மாணவியொருவரை ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பாடசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பெற்றோரும் பொதுமக்களும் இணைந்து பாடசாலையை முற்றுகையிட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கைதுசெய்யும்வரை பாடசாலையை விட்டு வெளியேறப் போவதில்லையென மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்