இலங்கையில் பலியானவர்கலின் உடல்களை எரியூட்டுவதை கட்டாயமாக்கும் விதிமுறையை தளர்த்துமாறு ஐ.நா கோரிக்கை வைத்துள்ளது.
உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்சவுக்கு இலங்கைக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளா் ஹனா சிங்கா் எழுதியுள்ள கடிதத்தில்,கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படக் கூடாது எனவும் அவை எரியூட்டப்படுவது மட்டுமே ஒரே வழி எனவும் இலங்கை அரசின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.
இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவுக்கும் இஸ்லாம் அமைப்பினா் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.