எனக்கு சாப்பாடு ஏதாவது கிடைக்குமா? இலங்கையில் ஹொட்டலுக்குள் நுழைந்த யானை!

Report Print Balamanuvelan in இலங்கை

ஹொட்டல் என்று போர்டு வைத்ததால் கண்டிப்பாக சாப்பாடு கிடைக்கும் என்று நினைத்ததோ என்னவோ, ஹொட்டல் ஒன்றிற்குள் நுழைந்துவிட்டது யானை ஒன்று.

இலங்கையிலுள்ள Jetwing Yala என்னும் ஐந்து நட்சத்திர ஹொட்டல் ஒன்றிற்குள் யானை ஒன்று நுழைந்தது.

உப்பிலி என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், யானை ஒன்று இலங்கையிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்குள் நுழைந்து சாவகாசமாக நடமாடும் செய்தியை தனது தாய் தனக்கு அனுப்பிவைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், சர்வசாதாரணமாக ஹொட்டலுக்குள் நடமாடும் யானை ஒன்று, மின் விளக்கு ஒன்றை சோதித்து பார்க்க, அது கீழே விழ, அதை திரும்ப எடுத்து வைக்கும் முயற்சி தோல்வியடைய, சோகமாக அங்கிருந்து நடையைக் கட்டுகிறது.

Christina Murphy என்பவர் வீடியோவைப் பார்த்துவிட்டு, அந்த யானை அந்த விளக்கை தட்டி விட்டு விட்டதைக் குறித்து கவலைப்படுகிறது தெரியுமா? என்று கேட்டுவிட்டு, இருக்கட்டும் திருவாளர் யானை அவர்களே, நீங்கள் வேண்டுமென்றே அதை செய்யவில்லை என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், அந்த யானையின் பெயர் Natta Kota என்றும், அது இப்படி அந்த ஹொட்டலுக்குள் நுழைவது முதல் தடவை அல்ல என்றும், அவ்வப்போது அந்த யானை ஹொட்டலுக்கு வந்து செல்வதுண்டு என்றும் கூறப்படுகிறது.

ட்விட்டரில் பகிரப்பட்ட அந்த வீடியோ 2.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டதோடு, 153 லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...