அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம்! லண்டன் செல்லும் இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in இலங்கை

ஈரான் மற்றும் ஈராக் இடையே நிலவும் பதற்றம் காரணமாக இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரான் இன்று காலை திடீரென்று அமெரிக்க தளம் மீது நடத்திய தாக்குதல் காரணமாக 80 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையே போர் பதற்றம், முன்பை விட இப்போது அதிகரித்துள்ளது, அதுமட்டுமின்றி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமான திடீரென்று விபத்தில் சிக்கியது, இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தவிட்டனர்.

இதற்கு முக்கிய காரணம் ஈரான் தான் எனவும், ஈரான் தவறுதலாக நடத்திய ஏவுகணை தாக்குதல் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஈரான் மற்றும் ஈராக் வான்வெளியில் விமானங்கள் பறக்க வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனம், கொழும்புவில் இருந்து லண்டன், லண்டனில் இருந்து கொழும்பு வரும் விமானத்தின் பாதையை மாற்றியுள்ளதாகவும், மத்திய பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏர்லைன்ஸ் நிறுவனம் மத்திய பிராந்திய பகுதியை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், தேசிய மற்றும் சர்வதேச அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே மிக முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...