விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே சிறந்த நாள்... நான் தவறாக கூறவில்லை: முரளிதரன் விளக்கம்

Report Print Basu in இலங்கை

விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே சிறந்த நாள் என தான் கூறியதாக பரவி வரும் கருத்து தொடர்பில் இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஏற்படுத்திய வியத்மக என்ற அமைப்பின் சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்தையா முரளிதரன், விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே சிறந்த நாள் என பேசியதாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார், போர் முடிந்ததும் எங்களிடம் இருந்த பயம் எல்லாம் போய்விட்டது என்று தான் நான் பேசினேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் வந்தால் சிறப்பாக இருக்கும் என என்னிடம் கேள்வி கேட்டார்கள், கேட்ட கேள்விக்கு தான் நான் பதிலளித்தேன். நான் யார் பெயரையும் ஜனாதிபதியாக குறிப்பிடவில்லை.

நான் பிறந்தது 1972 ஆம் ஆண்டு, 1987 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை அடுத்து தமிழர்கள் எல்லாம் பயந்தார்கள். யுத்தம் நடந்த போது இரண்டு தரப்பிலும் பிழை இருந்தது. 2009 யுத்தம் நிறைவடைந்தது இதனையடுத்து மக்களிடம் இருந்த பயம் எல்லாம் போய்விட்டது.

நாட்டில் 2019 நடந்த தாக்குதலை அடுத்து மக்கள் மத்தியில் மீண்டும் பயம் வந்து விட்டது. யார் தேசிய பாதுகாப்பை உறுதி செய்கிறார்களோ அவர்களுக்கு தான் நான் வாக்களிப்போன். ஆனால், நீங்கள் வாக்களிப்பது உங்களுடைய உரிமை. எனக்கு மக்கள் பயமில்லாமல் இருக்க வேண்டும்.

இதில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே சிறந்த நாள் என தான் ஒருபோதும் கூறவில்லை. நான் அரசியலுக்கு வரப்போவதும் இல்லை, நாட்டை ஆளப்போவதும் இல்லை. ஒரு மனிதனாக என்னிடம் கேட்ட கேள்விக்கு உரிமைகளுடன் பதிலளித்தேன் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்