ஈஸ்டர் குண்டுவெடிப்பு: இலங்கை ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு

Report Print Basu in இலங்கை

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, நாட்டின் தேசிய புலனாய்வுத் தலைவரை அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக் குழு, தாக்குதல் நடக்க சாத்தியமான குறைகளை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மே 29ம் திகதி, தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிரா மெண்டிஸ், பாதுகாப்புக் குழு கூட்டங்கள் ஒழுங்கற்றனவாக இருந்தால் தான் நாட்டை பாதுகாக்க கடினமாக இருந்தது. ஜனாதிபதிக்கு தாக்குதல் குறித்த விடுக்கப்பட்ட எச்சரிக்கை தெரியும் என இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.

இக்குழுவில் ஆஜரான அதிகாரிகள் ஜனாதிபதிக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே, நாட்டின் தேசிய புலனாய்வுத் தலைவரை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஜனாதிபதி அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஜனாதிபதி சிறிசேனா, இந்த நாடாளுமன்ற குழு விசாரணையை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் எனது அதிகாரிகளை விசாரணைக்கு அனுப்ப மாட்டேன் என வெள்ளி இரவு நடந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்