இலங்கையில் நேற்று நடந்த வன்முறை... அங்கிருக்கும் இஸ்லாமியார்கள் மிகவும் வேதனையுடன் பேசும் வீடியோ

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் நேற்று இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் மிகுந்த வேதனையுடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், திட்டமிட்ட சில குழுக்கள் இஸ்லாமியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகள் மீது கற்களை எரிந்தும், தொழிற்சாலையில் தீ வைத்தும் தாக்குதல் நடத்தினர்.

இதனால் நாட்டில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு நேற்று ஊரடங்கு சட்டம் அமல்படுத்தபட்டதுடன், இன்றும் அது அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதலை அடுத்து இஸ்லாமிய மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அவர்களில் சிலர் மிகுந்த வேதனையுடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், அவர்கள் இஸ்லாமியர்கள் தீவிரவாதி இல்லை, எதற்காக தாக்குகின்றனர் என்றே புரியவில்லை, நாங்கள் எல்லாம் நல்லவர்கள், இது வேதனையளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் அரச படையினர் நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சட்டத்தை மீறிவோர் மீது கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்