மீண்டும் 1983-க்கு செல்ல வேண்டாம்.. அழகான நம் நாட்டை காப்பாற்றுவோம்... இலங்கை வீரர் மேத்யூஸின் நெகிழ்ச்சி பதிவு

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் தற்போது உள்ள சூழல் குறித்து இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் சில இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை அணி வீரர் மேத்யூஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாம் வெறுப்பை பரப்பினால் எல்லா மதம் மற்றும் இனங்களில் இருந்தும் அப்பாவிகளின் உயிரை இழக்க நேரிடும்.

தயவு செய்து மீண்டும் 1983-க்கு செல்ல வேண்டாம். நம் குழந்தைகளை நினைத்து ஒன்றினைந்து நம் அழகான நாட்டை காப்பாற்றுவோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்