எங்கள் இலங்கையை அழிக்காதீர்கள்.. குழந்தைகளை நினைத்து பாருங்கள்... உருகிய இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர்

Report Print Raju Raju in இலங்கை

உலக்கோப்பை தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணரத்னே தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் நேற்று சில இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்களின் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து அந்த இடங்களில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணரத்னே டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இது நம் நாடு, தயவு செய்து இலங்கையை அழித்துவிடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் வெறுத்து கொண்டால் நாம் எப்போதும் வளர்ந்தநாடாக இருக்க முடியாது.

உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள், நம்முடைய எதிர்காலம் நம்முடைய தற்போதைய செயலில் தான் உள்ளது.

இனவெறிக்கு எதிராக நிற்போம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்