ஒரு நாள் நீ அழுவாய்... இலங்கையில் சமூகவலைத்தளம் திடீரென்று முடக்கப்பட்டதன் பின்னணி இதுவா?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில், மசூதி மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், தற்காலிமாக சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவர்கள் அதிகம் இருப்பதாக கூறப்படும் Chilaw பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களின் வர்த்த நிலையம் மற்றும் மசூதி மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இப்படி ஒர் பதற்றமான சூழ்நிலையில் Abdul Hameed Mohamed Hasmar என்ற நபர் பேஸ்புக் பக்கத்தில் ஒரு நாள் நீ அழுவாய் என்று கமெண்ட் செய்திருந்ததால், இது அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.

இதன் காரணமாகவே சமூகவலைத்தளங்களான வட்ஸ்அப், வைபர், IMO,Snapchat, இன்ஸ்ட்ராகிராம் மற்றும் YouTube ஆகிய சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு இன்று அறிவித்திருந்தது. பேஸ்புக்கில் அப்படி ஒரு கமெண்ட் போட்ட நபரை பொலிசார் கைது செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்