இலங்கையில் முக்கிய தலைவர்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடரும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் நாட்டின் தலைவர்கள் ஒன்றாக பயணம் செய்யவேண்டாம் என புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இனி வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையோடு நடந்துகொள்ளுமாறும், வழிபாட்டு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதில் சற்று விலகி இருக்குமாறும், கண்டிப்பான முறையில் கலந்துகொள்ளும் முக்கியத்துவம் இருப்பின் உலங்குவானூர்திகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்