இலங்கையின் அறிவுரைபடி இருநாடுகளில் தடைசெய்யப்பட்டது Peace TV ...!

Report Print Abisha in இலங்கை

குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கையின் அறிவுரையின்படி இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாட்டில் Zakir Naik-ன் Peace TV தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் பல்வேறு தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், தற்போதைய சூழலில் மீண்டு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அதற்கான நடிவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்புடைய பலரை வெவ்வேறு நாடுகளில் கைது செய்யும் நடிவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருக்கின்றன.

இந்நிலையில் இந்தியா மற்றும் பங்களதேஷில் ஒளிபரப்பாகும் Peace TV என்ற தொலைக்காட்சியை தற்காலிகமாக தடைசெய்ய இலங்கை அரசு கேட்டு கொண்டுள்ளது.

ஏனெனில் அதில் ஒளிபரப்பப்படும் Zakir Naik’s என்பவரின் உரை இளைஞர்களை ஐஎஸ் இயக்கத்தில் இழுத்து செல்வதாக இருப்பதால் இலங்கை அரசு இத்தகைய கோரிக்கையை வைத்துள்ளது.

அதன்படி மறு உத்தரவு வரும்வரை Zakir Naik’s-ன் நிகழ்ச்சிகள் எதுவும் ஒளிபரப்ப தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெரிய கேபிள் டிவி இயக்ககமான "Dialogue" மற்றும் "LT" ஆகியவற்றிற்கு Zakir Naik-ன் Peace TV -ஐ ஒளிபரப்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை குண்டுவெடிப்பில் கேரளமாநிலத்தில் கைது செய்யப்பட்ட நபர் Zakir Naik-ன் பேச்சுகளை தொடர்ந்து கவனித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்