இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவின் தலைவர் குறித்த தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரியாக செயல்பட்ட சஹ்ரான் ஹசீம் என்பவர் தான் பயங்கரவாத குழுவின் தலைவர் என இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு திட்டத்தின் தலைவர் சஹ்ரான் கிடையாது என தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் தலைவராக இருந்திருந்தால் அவர் தற்கொலை குண்டுதாரியாக செயல்பட்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் தலைமைத்துவம் வழங்கிய நபரை கைது செய்துவிட்டோம் என்றும் அவர் ஒரு இலங்கையர் என்று தெரிவித்துள்ளார்.

அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது எங்களது அதிர்ஷ்டம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்