ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்: கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் முழு பட்டியல் வெளியானது

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான வெளி நாட்டினரின் முழு பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

இதில் 25 பேரின் உடல்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த இருவர் மரணமடைந்ததை தொடர்ந்து இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 என அதிகரித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களில் 11 பேர் இந்தியர்கள், பிரித்தானியா(6), சவுதி அரேபியா(2), அவுஸ்திரேலியா(2), சீனர்கள்(4), டென்மார்க்(3), துருக்கி(2), அமெரிக்கா(2), ஸ்பெயின்(2) மற்றும் ஜப்பான், சுவிட்சர்லாந்து, போர்த்துகல் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், 12 வெளிநாட்டவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளதாகவும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹொட்டல்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நாடு முழுவதும் தீவிரவாதிகளை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்