இலங்கை குண்டுவெடிப்பு முக்கிய சூத்திரதாரியின் மனைவி, மகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் நாளில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய சூத்திரதாரியின் மனைவி மற்றும் மகள் இருவரும் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப்படையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின்போது குறித்த இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஈஸ்டர் தினத்தன்று முகம்மது சஹ்ரான் ஹாஷிம் என்ற ஐ.எஸ் தீவிரவாதியின் தலைமையில் குழு ஒன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தங்கும் நட்சத்திர ஹொட்டல்கள் உள்ளிட்ட 8 பகுதிகளில் தொடர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்தனர்.

இதில் சுமார் வெளிநாட்டு பயணிகள் சிறார்கள் உள்ளிட்ட 253 அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு 52 மணி நேரம் கடந்த பின்னர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

இதனிடையே சஹ்ரான் ஹாஷிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தலைமறைவாக இருந்த ரகசிய இல்லத்தை கடந்த வெள்ளியன்று பொலிசார் முற்றுகையிட்டு தாக்கினர்.

இதில் சஹ்ரான் ஹாஷிமின் தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

மட்டுமின்றி சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா மற்றும் 4 வயது மகள் முகம்மது சஹ்ரான் ருசைனா ஆகிய இருவரையும் சனிக்கிழமை காலை காயங்களுடன் பொலிசார் மீட்டனர்.

ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படுவர் சாதியா. இவர் தமது மகளுடன் அதி உச்ச பாதுகாப்புடன் அம்பாராவில் உள்ள மருத்துவமனை ஒன்றி சிகிச்சை பெற்று வந்தார்.

5 முதல் 10 விழுக்காடு தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது இருவரும் குணமடைந்து வருவதாகவும், ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிக்கப்பட்டுள்ளன.

சாதியா முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டாலும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என மருத்துவமனை மேலாளர் உபுல் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச ஊடகம் ஒன்று சிகிச்சையில் இருந்துவரும் சாதியாவை சந்திக்க விடுத்த கோரிக்கையை மருத்துவமனை வட்டாரம் நிராகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்