இலங்கையில் கடல் வழியாக மற்றொரு தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு? இந்திய உளவுத்துறை எச்சரிக்கை

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையில் கடல் வழியாக இன்னொரு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா மற்றும் இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும், அதனால் கடற்கரையோர பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் இந்திய உளவுத்துறை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து யாழ்பாணம் குருநகர் பகுதிக்கு விரைந்த ராணுவம், கடற்படையினர், சிறப்பு படையினர் மோப்ப நாயுடன் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.

பருத்தித்துறை, நெல்லியடி, நாவாந்துறை, ஐந்துசந்தி மற்றும் தீவகப்பகுதிகள் ஆகிய இடங்களிலும், சாலைகளில் செல்லும் வாகனங்கள் மற்றும் நடந்து செல்வோரிடமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்