கொழும்பில் ஐஎஸ் பயங்கரவாதியால் பதிவு செய்யப்பட்ட வீடு கண்டுபிடிப்பு: முக்கிய பொருட்கள் சிக்கின

Report Print Deepthi Deepthi in இலங்கை

கொழும்பில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் வீட்டினை கண்டுபிடித்த பொலிசார் அந்த வீட்டில் இருந்து சில முக்கிய பொருட்களை மீட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீலிக்ஸ் தொடர்மாடி குடியிருப்பில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் குறித்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய தெளஹீத் ஜமா அத்தின் தலைவர் சஹ்ரானினால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் ஐஎஸ் - யின் கருத்துக்கள் அடங்கிய இரு வெட்டுக்கள், பயங்கரவாதிகள் மற்றும் தெளஹீத் ஜமா அத் அமைப்பினரின் தகவல்கள் அடங்கிய டெப் கணினி ஒன்று, 12 கையடக்கத் தொலைபேசிகள், 5 கடவுச் சீட்டுக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்கொலைதாரிகளாக செயல்பட்டவர்கள் தங்கியிருந்த இடம் ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளுக்கு வீடு வழங்கிய உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்