இலங்கையில் இனிமேல் இது போன்ற தாக்குதல் நடக்க கூடாது.. பெண் செய்த நெகிழ்ச்சி செயலின் புகைப்படங்கள்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் இனி இது போன்று வெடிகுண்டு தாக்குதல் நடைபெறக் கூடாது என்பதற்காக பெண்மணி ஒருவர் தான் வளர்த்து வந்த நாய்களை இராணுவத்திற்கு அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 250-க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கற்றவாளிகளைப் பிடிக்க, அந்நாட்டு அரசு ராணுவத்தை ஈடுபடுத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், ராணுவமும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்பு முதல் கேரளாவின் காசர்கோடு வரை விசாரணை நடந்துவருகிறது. அதேநேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை பெண்மனி செய்த செயலுக்கு அந்நாட்டு மக்கள் பாராட்டி வருவதுடன், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் கொழும்புவில் இருக்கும் இன்டர்நெஷனல் யுனிவர்சிட்டியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஷிரு விஜேமன்னே என்ற பெண், கொழும்பில் நடந்த கொடூர வெடிகுண்டுத் தாக்குதல்களைக் கண்டு வேதனையடைந்து இனிமேல் இது மாதிரியான தாக்குதல் நடக்கக் கூடாது என்பதற்காக, தான் வளர்த்துவந்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்கள் ஐந்தை ராணுவத்துக்குக் கொடுத்துள்ளார்.

இந்த ஐந்து நாய்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. குண்டுவெடிப்பின்போதும் சரி, அதற்கு முன்பாக நடந்துவரும் போதை மருந்து கடத்தல்களைக் கண்டுபிடிப்பதில் ராணுவம் முக்கியப் பங்கு வகித்துவருகிறது.

இதனால்தான், நாய்களை ராணுவத்துக்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார். இந்த நாய்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்