சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுவெடிப்பை பார்த்தவர்கள் அளித்த விளக்கம்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையின் சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடிப்பை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நடந்தவை குறித்து விளக்கியுள்ளனர்.

இலங்கையின் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

பலியானோரில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவர்.

சாய்ந்தமருதில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 'பொலிவேரியன்' வீட்டுத் திட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்த அப்துல் நாசர் என்பவர் கூறியதாவது, எனது வீடு சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ளது. சுமார் 5.45 மணியளவில் அந்த வீட்டின் அருகே வேன் ஒன்று வந்தது. நாங்கள் சென்று பார்க்கையில் ஆயுதங்களுடன் அந்த வேனில் இருந்து இறங்கியவர்கள், இங்கு யாரும் வராதீர்கள், சென்றுவிடுங்கள் என்று சொன்னார்கள்.

இதனால், நாங்கள் அந்த இடத்தை விட்டு வந்த சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது. அதற்கு முன்னர் இரண்டு பெண்கள் வந்து நாங்கள் தற்கொலை செய்யப்போகிறோம் என கூறினர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விளக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்களே கிராம சேவகர் மற்றும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...