உங்களால் தான் கெட்ட பெயர்... தீவிரவாதத்தை ஆதரிக்க மாட்டோம்... இலங்கை இஸ்லாமியர் ஆவேசமாக பேசிய வீடியோ

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தீவிரவாதிகள் தங்களின் நிம்மதியை கெடுத்துவிட்டனர் எனவும் அவர்களை ஒரு போதும் ஆதரிக்க மாட்டோம் எனவும் கூறியுள்ளனர்.

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில், இவர்கள் முன்னர் மைக் போட்டு கத்தினார்கள், அப்போதே நான் கூறினேன், இவர்கள் பேசுவது சரியில்லை.

இவர்களால் தான் இஸ்லாமிய சமுகத்தினருக்கு கெட்ட பெயர் வர போகிறது என கூறினேன்.

அவர்கள் பேசும் பேச்சு நாசத்தை உண்டாக்குமே தவிர நிம்மதியை உண்டாக்காது என சொன்னேன்.எங்கள் நிம்மதியை கெடுத்த நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள்.

இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் நிம்மதியையும் கெடுத்துவிட்டீர்கள்.

நாங்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட துரோகிகள் மற்றும் தீவிரவாதிகளை ஆதரிக்க மாட்டோம். இது போன்ற பேச்சுக்களை பேசுகிறவர்களை காட்டி கொடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...