கொழும்பு குண்டு வெடிப்பில் மகளை பறிகொடுத்த இஸ்லாமியர்... அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் செல்லும் பரிதாபம்

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் மகளை பறிகொடுத்த இஸ்லாமிய தந்தை, கண்ணீர்விட்டு வேதனையுடன் கூறியுள்ளார்.

தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் பலர் இறந்துள்ளனர்.

இதனால் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் அவர்களை தினமும் எண்ணி கண்ணீர்விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இஸ்லாமியர் முகமது அரோசின் மகள் பாத்திமா அஸ்லா பலியாகியுள்ளார்.

இவர் தனது மகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தினமும் இரண்டு அல்லது மூன்று முறை வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய பெயர் அரோஸ், மனைவியின் பெயர் ரிவ்டா, மூத்த மகளின் பெயர் பாத்திமா அப்ரா, இப்போது இறந்திருப்பது பாத்திமா அஸ்லா, மோகன் அர்ஸத் என்ற மகன் இருக்கிறான் என்று கூறியுள்ளார்.

கிறிஸ்துவ பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், மனைவி வீட்டாரின் விருப்பத்தின் படி தனது பிள்ளைகளை நீர்கொழும்பில் உள்ள தேவாலயத்திற்கு அனுப்பி வந்துள்ளார், அங்கு தீவிரவாதி நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அவரின் மகள் இறந்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...