தற்கொலை குண்டு தாக்குதல்தாரியின் மிக அருகில் என் மகள் நின்றிருந்தாள்... அப்போது... நடந்ததை விவரித்த தாய்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரின் தாய் தன் மகள் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த குண்டுவெடிப்பில் 253 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஈஸ்டர் தினத்தை கொண்டாடுவதற்காக சென்ற சிறுவர்களும் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலில் பலியானார்கள்.

தாக்குதலில் உயிரிழந்த சிநேகா (13)-வின் தாய் கூறுகையில், சினேகா எனக்கு முதல் குழந்தை, தினமும் இரவு என் கையில் படுத்துத் தான் உறங்குவாள்

விரைவில் அவளின் பிறந்தநாள் வரவுள்ளது. அதை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என தினமும் கூறி வந்தாள், ஆனால் தற்போது அவள் எங்களுடன் இல்லை.

ஈஸ்டர் தினத்தன்று நாங்கள் அனைவரும் சேர்ந்து நீர்கொழும்பு செபஸ்டியன் தேவாலயத்துக்கு சென்றோம்.

சிநேகா எங்களுக்கு முன்னால் நின்றிருந்த நிலையில் நாங்கள் அவளுக்குப் பின்னால் சற்று தூரத்தில் இருந்தோம்.

தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியவருக்கு மிகவும் அருகில் அவள் இருந்தாள், அப்போது குண்டு வெடித்தது, இதையடுத்து சிநேகாவின் உடல் பாகங்கள் சிதறிவிட்டன.

பின்னர் ஒரு பெட்டியில் அவளின் உடலை அள்ளிப் போட்டு கொண்டு வந்தனர் என கண்ணீரோடு கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...