இலங்கை குண்டு வெடிப்பு... இறந்ததில் மகிழ்ச்சியே! உடல்களை பார்க்க மறுத்த தீவிரவாதியின் சகோதரி

Report Print Santhan in இலங்கை

இலங்கை கல்முனை பகுதியில் இறந்தவர்களின் உடலை அடையாளம் காணுவதற்கு அவரது சகோதரியை அழைத்த போது, அவர் வரமால், தவறான அமைப்போடு இஸ்லாத்தை கற்ற அவன் இறந்தது மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

நாட்டில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பிற்கு முக்கிய காரணமாக செயல்பட்டது Zahran Hashim என்ற நபர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவனின் குடும்பத்தினர் கல்முனை பகுதியில் பதுங்கியிருந்ததை அறிந்த அதிரடிப் படையினர், அவர்களின் வீட்டை சுற்றி வளைத்த போது, அந்த வீட்டில் இருந்த அவர்கள் தீடீரென்று தற்கொலை படை தாக்குதலை நடத்தியதால், வீட்டின் உள்ளே இருந்த குழந்தைகள் உட்பட 15 பேர் இறந்தனர்.

இதில் சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இந்நிலையில் கல்முனையில் நடந்த குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடலை அடையாளம் காணுவதற்கு ahran Hashim-ன் சகோதரி Madhaniya (26) மற்றும் அவருடைய கணவர் செரிப் நியாஸை லங்கை அரசு நேரில் அழைத்துள்ளது.

அதுமட்டுமின்றி Zahran Hashim-ன் சகோதரர் Mohammed Zeyin Hashim காணவில்லை, இதனால் கல்முனையில் இறந்த தீவிரவாதிகளில் அவர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இதனால் அதனை உறுதி செய்யும் வகையில், Zahran Hashim-ன் சகோதரி Madhaniya (26) மற்றும் அவருடைய கணவர் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் 15 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ள அம்பறா மருத்துவமனையில் அவர்களின் உடலை அடையாளம் காண மதனியா வந்த போது, புகைப்படங்களை மட்டும் காட்டுங்கள் நான் அடையாளம் காட்டுகின்றேன் என்று கூறவே உடனே கணவர் நியோஸோ, அவர்கள் உன் உறவினர்கள் தான் என்றால், நீ அவர்களை பார்ப்பது இதுவே இறுதி முறையாகும். எனவே சென்று பார்த்துவிட்டு வா என்று வற்புறுத்தியுள்ளார்.

இருப்பினும் அவர் சகோதரன் Zahran Hashim தவறான ஆட்களிடம் இருந்து இஸ்லாத்தை கற்றுக் கொண்டான் அவன் இறந்ததில் மகிழ்ச்சி தான் என்று கூறியுள்ளார்.

கல்முனையில் நடைபெற்ற தாக்குதலின் போது Zahran Hashim-ன் மூன்றாவது சகோதரன், அவருடைய மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

Mohammed Zeyin Hashim மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள், ஜஹ்ரானின் சகோதரி, அவருடைய கணவர் மற்றும் அவர்களின் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர். மேலும் ஜஹ்ரானின் இரண்டு குழந்தைகள், மற்றும் ஜஹ்ரானின் வயதான பெற்றோர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...