குண்டுவெடிப்பு நடந்த ஒரு வாரத்துக்கு பின்னர் தேவாலயத்தின் வாசலில் கூடிய மக்கள்: நெகிழ்ச்சி புகைப்படம்

Report Print Raju Raju in இலங்கை

கொழும்பில் ஒரு வாரத்துக்கு முன்னர் குண்டு வெடித்த செண்ட் அந்தோணியார் தேவாலயத்தின் வாசலில், உயிரிழந்தவர்களுக்காக மக்கள் கண்ணீர் மல்க இன்று பிரார்த்தனை செய்தார்கள்.

இலங்கையில் கடந்த வாரம் ஞாயிறு அன்று 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தார்.

குண்டுவெடிப்பு நடந்த 8 இடங்களில் கொழும்பில் உள்ள செண்ட் அந்தோணியார் தேவாலயமும் ஒன்றாகும்.

இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்து ஒரு வாரம் கழித்து இன்று அந்த தேவாலயத்தின் வாசலில் மக்கள் கூடினார்கள்.

பின்னர் பாதிரியார் ஜூட் ராஜ் முன்னிலையில் உயிரிழந்தவர்களுக்காக கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலியும், பிரார்த்தனையும் செய்தார்கள்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...