கழுவ கழுவ இரத்தமாக வந்தது... குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய தமிழர்களின் திகில் அனுபவங்கள்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பில் உயிர் தப்பிய தமிழர்கள் சம்பவத்தின் போது ஏற்பட்ட திகிலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த வாரம் ஞாயிறு அன்று 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நபர்கள் சிலர் அந்த சமயத்தில் தாங்கள் கண்ட காட்சிகள் குறித்து பேசியுள்ளனர்.

ஒருவர் கூறுகையில், இது போன்ற சத்தத்தையே நான் இதுவரை கேட்டதில்லை, மிக பயங்கரமான சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது என மிரட்சியுடன் கூறினார்.

இன்னொரு நபர் கூறுகையில், காக்கா குருவிகள் எல்லாம் படபடவென அதிகளவில் பறந்ததை கண்டேன், கட்டிடங்களின் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் நடுரோட்டில் வந்து விழுந்தது.

நீச்சல் குளத்தை எட்டி பார்த்தபோது திடீரென பயங்கர சத்தம் கேட்டது, பின்னர் அதிலிருந்து கழுவ கழுவ ரத்தமாக தான் வந்தது, உள்ளே தண்ணீரே இல்லை.

சம்பவத்துக்கு பின்னர் மீண்டும் என் குடும்பத்தை பார்ப்பேனா என்ற சந்தேகத்துடன் தான் இருந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...