சமூக சேவையில் முன்னர் ஈடுபட்ட இலங்கை தாக்குதலின் சூத்திரதாரி... தடம் மாறியது எப்போது? வெளியான தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை தற்கொலை குண்டுதாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டு அதை நடத்தியதாக கூறப்படும் ஜகரன் ஹாசிம் உயிரிழந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

ஹாசிம் முன்னர் சமூக சேவையாளராக அறியப்பட்ட நிலையில் பின்னர் தீவிரவாத செயலில் ஈடுபட்டுள்ளார்.

இவர் தான் தேசிய தஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் ஆவார். இவர் குறித்து தேசிய தஹீத் ஜமாத் அமைப்பின் தற்போதைய தலைவர் தெளபீக் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஹாசிம் ஆரம்பத்தில் இலங்கை அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவராகவே இருந்து வந்தார்.

மேலும் ரட்சபானா போன்ற இடங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது ஹாசிம் மாற்று மதத்தினர்களுக்கு கூட நேரடியாக சென்று உதவி செய்து வந்துள்ளார்.

இதோடு இரத்தம் தானம் செய்வது போன்ற சமூக சேவைகளிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

பின்னர் 2017-ல் காத்தாங்குடியில் ஏற்பட்ட கலவரத்துக்கு பின்னர் ஹாசிம் மாயமானார்.

இதையடுத்து பல மாதங்களுக்கு பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பல கருத்துகளை முன்வைத்தார்.

இதன் பின்னர் எங்கள் அமைப்பு இலங்கை சட்டத்துக்கு எதிராக ஹாசிம் பேசுகிறார் என்பதை அறிந்து அவரை 2017ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 29ஆம் திகதி இயக்கத்தில் இருந்து நீக்கிவிட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...