இலங்கை பொலிஸார் கைப்பற்றிய வெடிமருந்து குவியல்: அதிர்ச்சியூட்டும் வீடியோ!

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையின் சாய்ந்தமருது பகுதியில் அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட, வெடிமருந்து குவியலின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர் இலங்கை முழுவதுமே பெரும் பரபரப்பில் இருந்து வருகிறது.

நாடு முழுவதும் ராணுவம் மற்றும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. தாக்குதலில் தொடர்புடைய நபர்களையும் பொலிஸார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பகுதியில், அதிரடி படையினர் சோதனையிட்ட போது பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகள், வயர்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடிகளை கைப்பற்றினர்.

பின்னர் இதுகுறித்து பேசிய இராணுவ செய்தித் தொடர்பாளர், இந்த பகுதியில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விரைந்து வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டோம். அந்த சமயம் திடீரென மர்ம நபர்கள் சிலர் எங்கள் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

இதனையடுத்தே பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிசூடு நடத்தி மர்ம நபர்களை கைது செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இடத்தில், 150 கிலிகினைட் குச்சிகள், 100,000 ball bearings, ஐஎஸ் சீருடைகள், ஐஎஸ் கொடிகள் மற்றும் காமிராவுடன் கூடிய ஒரு ட்ரோன் இருந்தது.

தாக்குதலுக்கு முன் தினம், ஐஎஸ் சீருடையை அணிந்துகொண்டு இஸ்லாமிய அரசுத் தலைவர் அபூ பக்கர் அல் பாக்தாதிக்கு இங்கு தான் உறுதிமொழி அளித்திருக்கின்றனர் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்