மக்களை பாதுகாக்க தவறிவிட்டேன்: மன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர் ரணில்!

Report Print Vijay Amburore in இலங்கை

பயங்கரவாத தாக்குதலில் இருந்து நாட்டை காக்க தவறியதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே மன்னிப்பு கோரியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 253 பேர் உயிரிழந்ததுடன், ஏராளமான பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவமானது உலக நாடுகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேக நபர்களை அடுத்தடுத்து பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதலில் இருந்து நாட்டை காக்க தவறியதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்கே மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் பேசிய அவர், பயங்கரவாதத் தாக்குதலால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும், சீரழிந்துள்ள தேவாலயங்களை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்