இலங்கையில் பொலிஸார் துப்பாக்கி சூடு... பிரதமர் வீடு அருகே தாக்குதல் நடத்த திட்டம்?

Report Print Vijay Amburore in இலங்கை

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப்படையினர் மற்றும் மர்ம நபர்களுக்கு இடையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை தாக்குதலுக்கான அங்கி தயாரிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, அதிரடி படையினரும் பொலிஸாரும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்த முயன்றபோது குண்டொன்று வெடித்ததாகவும், இதனையடுத்து அதிரடிப்படையினருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் மூன்று குண்டுகள் வெடிக்க செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இங்கு நடைபெற்ற சோதனையில் பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் மருந்து வகைகள், வயர்கள் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

அதேபோல இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் மாளிகை அருகே தற்கொலைப் படை தாக்குதலுக்கான அங்கிகளையும், அங்கு சுற்றி திரிந்த மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தில் தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 253 உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று இரவு இரவு 10 மணி முதல் நாளை, சனிக்கிழமை, காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்