இலங்கை அரசு தவறாக வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் பெண் யார்? பின்னணி தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கை தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்ட இலங்கை அரசு, அதில் தவறுதலாக பெண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டு மன்னிப்பு கோரியது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரான அமரா மஜீத் என்கிற இளம்பெண்ணின் புகைப்படம் 'அப்துல் காதர் பாத்திமா காதியா' என்கிற பெயரில் வெளியிடப்பட்டிருந்தது.

யார் அந்த பெண்?

அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் பிறந்த மஜீதின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.

2015ஆம் ஆண்டு பிபிசியின் 100 Women தொடரில் அமரா மஜீத் இடம் பெற்றிருந்தார்.

தனது 16 வயதில் The Hijab Project என்ற திட்டத்தினை தொடங்கிய இவர், முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து The Foreigners என்ற புத்தகத்தை எழுதினார். மேலும் முஸ்லீம்கள் மீதான தவறான பார்வையை மாற்றுவது இவரது நோக்கமாக செயல்பட்டு வருகிறார்.

தனது புகைப்படம் தவறாக வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டிய அமரா, இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறான தகவல் பரிமாற்றத்தை தவிர்க்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

விளக்கம் அளித்த அரசு

குற்றபுலனாய்வு பிரிவினர் இந்த புகைப்படத்தை அனுப்பியதாகவும், அதனையே தான் வெளியிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அது தவறான புகைப்படம் என சுட்டிக்காட்டினார்.

மேலும், தவறான புகைப்படத்திற்காக இலங்கை பொலிசார் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்