இலங்கை குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டாரா? வெளியான தகவல்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதின் சகோதரர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதை அமைச்சர் ரிஷாட் மறுத்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியூதின் சகோதரர் மீது குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் ராணுவத்தினர் அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது

கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட பின்னர் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த ரிஷாட், குண்டுவெடிப்பிற்கும் எனது சகோதரருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

எனது சகோதரர் கைது செய்யப்படவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்