இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதி ஒருவனின் கடைசி நிமிடங்கள்: கெமராவில் சிக்கிய காட்சி!

Report Print Balamanuvelan in இலங்கை

பெரிய நட்சத்திர ஹொட்டல் ஒன்றிற்கு குறிவைத்து குண்டு வெடிக்காததால் சிறிய கெஸ்ட் ஹவுஸ் ஒன்றிற்கு தீவிரவாதி ஒருவன் செல்லும் CCTV கெமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் கல்வி கற்றதாக கூறப்படும் அப்துல் லத்தீப் என்னும் தீவிரவாதி இலங்கையின் பிரபல Taj Samudra நட்சத்திர ஹொட்டலுக்கு குறிவைத்துள்ளான்.

ஆனால் அவன் வைத்த குண்டு எதிர்பார்த்த நேரத்திற்கு வெடிக்காததால், அவன் தங்கியிருந்த ஹொட்டலை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதனால் அவன் Tropical Inn என்னும் சிறிய கெஸ்ட் ஹவுசுக்கு சென்றதாகவும், அங்கு வெடி குண்டை சோதிக்கும்போது அது வெடித்து சிதறியதில் அவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

தற்போது அந்த செய்தியை உறுதி செய்யும் விதமாக Tropical Innக்கு அப்துல் லத்தீப் செல்லும் காட்சிகள் CCTV கெமராவில் பதிவாகியுள்ளன.

அந்த வீடியோவில் அவன் ஒரு பையை தூக்கிக் கொண்டு அந்த கெஸ்ட் ஹவுஸ்க்குள் நுழைவதைக் காண முடிகிறது.

இதற்கு பிறகே அவன் வெடிகுண்டு வெடித்து பலியாகியுள்ளான்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்