இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி.. காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா ராஜினாமா!

Report Print Kabilan in இலங்கை

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக அந்நாட்டு காவல்துறை தலைவர் ராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி சிறிசேனா தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் 359 பேர் பலியானதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால், பலி எண்ணிக்கை 253 தான் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படுகாயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ஃபெர்னாண்டோ ஆகியோரை ராஜினாமா செய்யும்படி, அந்நாட்டு ஜனாதிபதி சிறிசேனா கடந்த புதன்கிழமை வலியுறுத்தினார்.

இந்நிலையில், காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்