இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகள் மீது தாக்குதல்.... பலர் வேறு இடங்களுக்கு இடமாற்றம்

Report Print Raju Raju in இலங்கை

இலங்கையின் Negomboவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இலங்கையில் 8 இடங்களில் நடந்த தீவிரவாத வெடிகுண்டு தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் Negombo-வில் தங்கியுள்ள பாகிஸ்தான் அகதிகளை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தாக்கியுள்ளனர்.

அந்த அகதிகளுக்கு தீவிரவாத தொடர்பு இருக்குமோ என்ற அச்சத்திலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து Negomboவில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் பேருந்துகள் மூலம் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

புகலிடம் கோரி வந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 800 பேரையாவது அந்த பகுதியில் வாழும் மக்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து வெளியேற வற்புறுத்தியுள்ளனர்.

இதையடுத்து 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இதோடு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 60 பேர் Negombo காவல் நிலையத்தில் தங்கியுள்ளதாக இளம் முஸ்லிம் ஆண்கள் சங்கத்தின் தலைவர் நவாசுதின் கூறியுள்ளார்.

மேலும் இந்த குடும்பங்கள் தொடர்பாக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் எடுக்க வேண்டும் எனவும், தங்களின் சங்கம் அவர்களுக்கு உதவும் எனவும் நவாசுதின் கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...