ஐஎஸ் இயக்கத்தில் தொடர்புடைய எத்தனை பேர் இலங்கையில் உள்ளனர்? தாக்குதல் குறித்து முன்னரே வந்த தகவல்

Report Print Raju Raju in இலங்கை

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி ஐஎஸ் இயக்கத்தில் தொடர்புடைய 130 - 140 தீவிரவாதிகள் இலங்கையில் இருக்கிறார்கள் என நாட்டின் அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்

இலங்கை அதிபர் சிறிசேனா அளித்துள்ள பேட்டியில், சமூகவலைதளத்தின் மீதான தடையை நீக்க திட்டமிட்டுள்ளோம், ஆனால் நேற்று சமூகவலைதளங்களில் பல தவறான தகவல்கள் பரவுவதால் இது குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என உள்ளோம்.

இது தொடர்பாக சமூகவலைதள அதிகாரிகளை சந்தித்து இன்று பேசவுள்ளேன், இது தடுக்கப்படவில்லை என்றால் முற்றிலும் இதை தடை செய்ய நேரிடும்.

இலங்கையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 130 முதல் 140 பேர் இருக்கிறார்கள்.

தற்போது அவர்களில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள், ஏப்ரல் 4ம் திகதியே குண்டுவெடிப்பு அசம்பாவிதம் ஏற்படப்போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது, இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகள் போல் பார்க்க வேண்டாம் என இலங்கை மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதிபர் சிறிசேனா கூறியுள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்